நானும் எனது பயணங்களும்..........
பயணம்....... ஒரு தேடல், ஏதாவது ஒன்றைத் தேடித்தான் நம் பயணங்கள் துவங்குகிறது....... ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டாயம் ஒரு காரணம் இருக்கும். என்னுடைய பயணங்கள் குறித்த ஒரு பார்வை இதோ ......
வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லை ..... எல்லா பயணங்களும் அல்லது எல்லோருடைய பயணங்களும் சுகமாக அமையும் என்று சொல்லி விட முடியாது......
சிறு வயதில் நாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் எப்பொழுதும் மகிழ்ச்சியானதுதான் என்றாலும் கூட , அந்த பயணங்களில் நமக்கு பிறருடைய துணை தேவைப்பட்டது......
பொதுவாக நம்முடைய பயணங்கள் பொருள் ஈட்ட வேண்டிதான் அமைகிறது, என்னுடைய முதல் பயணமும் அவ்வாறே...... எவ்வளவுதான் பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று படித்தாலும் கூட நம் வாழ்க்கை என்பது நமது முதல் பயண அனுபவத்தில் இருந்துதான் தொடங்குகிறது ....
No comments:
Post a Comment